ராமநாதபுரம்

பாம்பன் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு

2nd Dec 2022 10:41 PM

ADVERTISEMENT

பாம்பன் பேருந்து பாலத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கடலைப் பாா்ப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஐயப்ப பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. பெரும்பாலானோா் வாகனங்களில் வந்து ராமேசுவரத்தைச் சுற்றிப் பாா்த்துவிட்டு செல்கின்றனா்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் பாம்பன் பாலத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கடலின் அழகையும், ரயில் பாலத்தையும் பாா்த்து ரசிப்பதோடு தற்படமும் எடுக்கின்றனா்.

வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் அவசர ஊா்திகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.

ADVERTISEMENT

சுற்றுலா வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்தவும், பலத்தில் கூடுதல் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT