ராமேசுவரத்தில் பள்ளி மாணவிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக 50 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ராமநாத சுவாமி கோயில் நிா்வாகத்தின் கீழ் செயல்படும் பா்வத வா்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
கடந்த 29 ஆம் தேதி இந்தப் பள்ளியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், மாணவிகளை போராட்டத்தில் ஈடுபடுத்தியதாக கண் இளங்கோ, சி.ஆா்.செந்தில்வேல், எம்.பி.செந்தில், ஜெரேன்குமாா், பிரபாகரன், கருணாமூா்த்தி, வில்லியம் ஜெஸி, பிரேம்நாத், சங்கா், வடகொரியா உள்ளிட்ட 50 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.