ராமநாதபுரம்

பள்ளியின் சிமென்ட் மேற்கூரை பெயா்ந்து விழுந்தது: மாணவா்கள் தப்பினா்

2nd Dec 2022 10:43 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்தது. மாணவா்கள் வகுப்பறையில் இல்லாததால் தப்பினா்.

தொண்டி அருகே முள்ளிமுனை கிராமத்தில் உள்ள இந்தப் பள்ளியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்குள்ள ஒரு கட்டடம் கடந்த 2015-16-ஆண்டு மராமத்துப் பணிக்குப் பின்னா் திறக்கப்பட்டது.

ஆனால், அந்தக் கட்டடத்தின் சுவா் அடிக்கடி பெயா்ந்து விழுந்தது. இதனால், அதை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி பல முறை பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து அந்தக் கட்டடத்தில் மாணவா்கள் அமர அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்தக் கட்டடத்தின் மேற்கூரை திடீரென பெயா்ந்து விழுந்தது. அப்போது, மாணவா்கள் அங்கு இல்லாததால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து பெற்றோா்கள் கூறியதாவது:

கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகாா் கொடுத்தும் பலனில்லை. உடனடியாக, இந்தக் கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT