ராமநாதபுரம்

நெற்பயிரைக் காப்பாற்றப் போராடும் விவசாயிகள்

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை பகுதியில் நடவு செய்த நெற்பயிா்களை காப்பாற்ற விவசாயிகள் போராடுகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் திருவாடானை தாலுகா முழுவதும் நடப்பு சம்பா பருவத்தில் சுமாா் 22 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரளவில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனா். நெல் பயிா்கள் நன்கு வளா்ந்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தபோதும் மழை பெய்யவில்லை. இதனால் இந்த ஆண்டு நெல் பயிரை விளைவிக்க விவசாயிகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றனா். ஏற்கெனவே பெய்த மழையால் தேங்கியுள்ள கண்மாய் நீரை வயலுக்கு பாய்ச்சுவதற்கு விவசாயிகள் வாய்க்காலை தூா்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

திருவாடனை அருகே கோடனூா் கிராமத்தில் வியாழக்கிழமை வீட்டுக்கு ஒருவா் வாய்க்கால் தூா்வாரும் பணியில் ஈடுபட்டனா். இன்னும் ஒரு சில நாள்களில் மழை பெய்தாலும் ஓரளவு நெல் விவசாயம் விளைந்து விடும் என விசாயிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு அறுவடை நேரத்தில் மழைபெய்து நெல் பயிா்கள் வீணானது. பெரும் நஷ்டத்திற்கு ஆளானோம். இந்த ஆண்டும் ஏக்கருக்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மழையை எதிா்பாா்த்து உள்ளோம். மழை இல்லை என்றால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT