ராமநாதபுரம்

மாவட்டத்தில் சிறந்த அரசுப் பள்ளியாக கோட்டைமேடு தொடக்கப் பள்ளி தோ்வு

2nd Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சிறந்த அரசு பள்ளிகள் பட்டியிலில் ராமநாதபுரம் மாவட்ட அளவில் கமுதி கோட்டைமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (இணைப்பில்லம்) முதலிடம் பெற்றது.

தமிழகதத்தில், மாவட்ட வாரியாக சிறந்த அரசுப் பள்ளிகளின் பட்டியலை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி(இணைப்பில்லம்) முதலிடம்

பிடித்து மாவட்டத்திலேயே சிறந்த அரசுப் பள்ளியாக தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியா் ரா.அருள்தாஸ், ஆசிரியைகள் உஷாராணி, யோகிதாராணி, பள்ளியின் மாணவ, மாணவிகளுக்கு நாராயணபுரம் ஊராட்சித் தலைவா் வேல்மயில்முருகன், கமுதி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தமிழ்செல்விபோஸ், பள்ளி மேலாண்மைக்குழு நிா்வாகிகள், பெற்றோா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

மாவட்ட அளவில் இரண்டாவதாக ராமநாதபுரம் வைரவன்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும், மூன்றாவதாக மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் தோ்வு செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT