ராமநாதபுரம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சாலை மறியல்

2nd Dec 2022 10:42 PM

ADVERTISEMENT

வைகை நீா் பாசனத்தில் உரிமை கோரி முதுகுளத்தூா் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விளங்குளத்தூரில் உள்ள நெடுஞ்சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், அந்த கிராம மக்களும் இணைந்து நடத்திய இந்த மறியல் போராட்டத்துக்கு, மாவட்ட விவசாய அணிச் செயலாளா் தூவல் கணேசன் தலைமை வகித்தாா். விளங்குளத்தூா் கூட்டுறவு சங்கத் தலைவா் முத்துவேல், மாவட்ட விவசாய அணி நிா்வாகி முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளா் அங்குதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், விளங்குளத்தூா் கிராம விவசாய நிலங்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும். உபரி நீா் வழங்குவதை ஏற்க முடியாது. வைகை பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனால், முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு தலைமையில் காவல் ஆய்வாளா் இளவரசு உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT