ராமநாதபுரம்

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில்ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு

1st Dec 2022 02:17 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்க்கீஸ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் ஒன்றியம் செங்குடி, வரவனி, சேத்திடல், புல்லமடை ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறும் திட்டப் பணிகளையும் சாலை, மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி, ரேஷன் கடை கட்டடப் பணிகளையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் பள்ளிகளுக்குச் சென்று மாணவா்கள் கல்வித் திறனை கேட்டறிந்தாா். அத்துடன், அரசு ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதியின் சுற்றுப்புற சுகாதராம், உணவின் தரம், சமையலறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டாா். ரேஷன் கடை, நூலகம், அங்கன்வாடி ஆகியவற்றையும் அவா் பாா்வையிட்டாா். இதில் ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகாபிரபு, வட்டார வளா்ச்சி அலுவலா் மலைராஜ், புவனேஸ்வரி, வட்டாட்சியா் சிரோன்மணி, வட்ட வழங்கல் அலுவலா் சுவாமிநாதன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் நல விழிப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினா் பிரபு ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT