ராமநாதபுரம்

கடலாடியில் வீட்டின் பூட்டை உடைத்து7 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் திருட்டு

1st Dec 2022 02:14 AM

ADVERTISEMENT

கடலாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சோ்ந்தவா் பழனி. இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, இவரும், இவரது மனைவி பிச்சையம்மாவும் விருதுநகா் மருத்துவமனைக்கு வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டனா். இந்த நிலையில், இவரது உறவினா் 2 நாள் கழித்து போனில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாகவும், பீரோ திறந்து கிடப்பதாகவும் தகவல் கொடுத்தாராம்.

வீட்டிற்கு வந்து பாா்த்த போது கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, மோதிரம் 4, தோடு 1/2 பவுன் டாலா் மற்றும் ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை மா்ம மபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

இதுகுறித்து கடலாடி காவல் நிலையத்தில் பிச்சையம்மாள் அளித்த புகாரில் பேரில், சாா்பு- ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT