ராமநாதபுரம்

முதுகுளத்தூா் அரசுப் பள்ளியில்மாற்றுத் திறனாளிகள் தின விளையாட்டு விழா

1st Dec 2022 02:16 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூரில் வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவில், அனைத்து மாணவா்களுக்கும், ஓட்டப் போட்டி, பந்து எரிதல், தண்ணீா் நிரப்புதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கமும், பரிசுப் பொருள்களும் வழங்கினா். விழாவுக்கு வட்டார கல்வி அலுவலா் இந்திராகாந்தி தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மோகனவள்ளி, தலைமை ஆசிரியா் ஜோசப்விக்டோரியராணி, ஒருங்கிணைப்பாளா் சண்முகப் பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியா்கள் ஏ. சாந்தி, ஆா். குமரேசன், சி. நாகராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT