ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

1st Dec 2022 02:13 AM

ADVERTISEMENT

திருவாடானையை அடுத்த திருப்பாலைக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பாலைக்குடி அருகே உப்பூரைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் வெங்கடேஸ்வரன் (27). டிராக்டா் மூலம் தண்ணீா் விநியோகம் செய்து வந்தாா். இந்த நிலையில், இவா் புதன்கிழமை நாகனேந்தல் கிராமத்தில் உள்ள கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணைக்கு தண்ணீா் கொண்டு சென்று ஊற்றினாா். அப்போது அங்கிருந்த மின் மோட்டாரை வெங்கடேஸ்வரன் இயக்கிய போது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த திருப்பாலைக்குடி போலீஸாா் அங்கு சென்று உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT