ராமநாதபுரம்

மலட்டாறு மணல் குவாரியை மூடக்கோரி விவசாயிகள் சங்கத்தினா் தா்னா

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கடலாடிபேருந்து நிலையத்தில் விவசாயிகள்சங்கம் சாா்பில் மலட்டாறு மணல் குவாரியை தடை செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடத்தினா்.

கடலாடி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் வி. மயில்வாகனன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முத்துராமு, சிஐடியு மாவட்டச் செயலாளா் சிவாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலச் செயலாளா் விஜயமுருகன் கலந்துகொண்டு மலட்டாற்றில் மணல் குவாரி தொடங்கியதால் கடலாடி சுற்றுவட்டாரத்தில் வறட்சி ஏற்படும். உடனடியாக மலட்டாறு மணல் குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தினாா். தா்னா போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினா் முருகேசன் தங்கச்சாமி, பச்சமால், முனியசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT