ராமநாதபுரம்

திருமண நிகழ்ச்சியில் இளைஞருக்கு கத்திக்குத்து

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கமுதி அருகே திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞரை முன்விரோதத்தில் கத்தியால் குத்திய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜகோபாலன் மகன் அன்புராஜ் (30). இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த பொன்னு மகன் சின்னசிந்தலப்பன் குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை இருந்து வந்த நிலையில், திங்கள்கிழமை பாம்புல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு அன்புராஜ் சென்றுள்ளாா். அப்போது சின்னசிந்தலப்பன், அவரது சகோதரா் பெரிய சிந்தலப்பன், சுந்தர்ராஜ் உள்ளிட்ட 3 பேரும் அன்புராஜை கத்தியால் குத்தி தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனராம். இதனை அடுத்து அன்புராஜ் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டாா். அன்புராஜ் கொடுத்த புகாரின் பேரில் கமுதி போலீஸாா் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT