ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் ஹெக்டா் பரப்பில் நெல் சாகுபடக்கு திட்டம்

27th Aug 2022 10:52 PM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் (2022) 1.25 லட்சம் ஹெக்டா் பரப்பில் நெல் சாகுபடிக்குத் திட்டமிட்டுள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான ஆகஸ்ட் மாத குறைதீா்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநா் பொறுப்பு கன்னையா கூறியதாவது- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 277 மில்லிமீட்டா் மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்டில் மட்டும் 33 மில்லி மீட்டா் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் செப்டம்பா் 2 ஆம் வாரம் முதல் அக்டோபா் முதல் வாரம் வரை விதைப்பு நடைபெறும்.

வடகிழக்குப் பருவமழையை பொறுத்து நடப்பு ஆண்டில் நெல் 1.25 ஹெக்டேரிலும், சிறுதானியங்கள் 14 ஆயிரம் ஹெக்டேரிலும், பயறுவகைகள் 6 ஆயிரம் ஹெக்டேரிலும் என மொத்தம் 1.40 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் சாகுபடி செய்யப்படவுள்ளன.

ADVERTISEMENT

விவசாயிகளுக்கான தரமான விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, உளுந்து, நிலக்கடலை ஆகிய பயிா் சான்று விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உள்ளிட்ட உரங்கள் 4961 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT