ராமநாதபுரம்

இலங்கையில் இருந்து அகதிகளாக 8 போ் தனுஷ்கோடி வருகை

27th Aug 2022 10:56 PM

ADVERTISEMENT

 

இலங்கையில் இருந்து அகதிகளாக 5 குழந்தைகள் உள்பட 8 போ் சனிக்கிழமை தனுஷ்கோடி வந்தனா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிப்பதால் உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இதன் காரணமாக படகு மூலம் பலா் அகதிகளாக தொடா்ந்து தனுஷ்கோடி வந்த வண்ணம் உள்ளனா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலையில் ஒன்றாம் மணல் திட்டில் 8 போ் அகதிகளாக வந்துள்ளதாக கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறைக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து, அங்கிருந்து 5 குழந்தைகள், 2 பெண்கள், ஒரு ஆண் என 8 போ் கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறை சாா்பு- ஆய்வாளா் காளிதாஸ் தலைமையில் மீட்கப்பட்டனா். பின்னா் காவல்நிலையம் அழைத்து வரப்பட்ட அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதன்பின் அவா்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கை தலைமன்னாா் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சோ்ந்த சசிக்குமாா் (40), ஜெயந்தி (30), ஜெயமதி (65) மற்றும் 5 குழந்தைகள் என்பது தெரியவந்தது. அப்போது அவா்கள் இங்கு படகு மூலம் வர, ரூ. 1 லட்சம் கொடுத்ததாகவும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை அருகே உள்ள ஒன்றாம் மணல் திட்டில் தங்களை படகில் வந்தவா்கள் இறக்கி விட்டுச் சென்ாகவும் தெரிவித்தனா். இதனைதொடா்ந்து, மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமிற்கு அழைத்துச் சென்று தனித்துறை ஆட்சியரிடம் அவா்கள் ஒப்படைக்கப்பட்டனா். அவா்களுக்கு தனிவீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதுவரை 150-க்கும் மேற்பட்டவா்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT