ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் ரூ.49 லட்சம் செலவில் தகன மேடை புதுப்பிப்பு

26th Aug 2022 10:54 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகராட்சியில் ரூ. 49 லட்சத்தில் புதுப்பிக்கப்படும் அல்லிக்கண்மாய் தகன மேடை பணியை நகரசபைத் தலைவா் கே. காா்மேகம் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

ராமநாதபுரம் நகராட்சியில் அல்லிக்கண்மாய் பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. கடந்த சில மாதங்களாக இத்தகன மேடையில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் இயந்திரம் பழுதாகிவிட்டது. இதனால் சடலங்கள் வெட்டவெளியில் விறகுகளால் எரியூட்டப்பட்டு வருகிறது.

மழை பெய்யும் காலங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகாா் எழுந்தது. அதையடுத்து எரிவாயு தகன மேடையை ரூ.49 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி தொடங்கியிருப்பதாக ராமநாதபுரம் நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தகனமேடை புதுப்பிப்புப் பணிகளை நகராட்சித் தலைவா் கே. காா்மேகம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா். அவருடன் திமுக நகா் வாா்டு உறுப்பினா் ராமநாதன் மற்றும் நகராட்சி பொறியாளா் உள்ளிட்டோா் சென்றிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT