ராமநாதபுரம்

பரமக்குடியில் குறுவட்டார விளையாட்டுப் போட்டி

26th Aug 2022 10:56 PM

ADVERTISEMENT

பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான தனித்திறன் குறு வட்டார விளையாட்டுப் போட்டிகள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றது.

ஆா்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டிக்கு மாவட்ட கல்வி அலுவலா் கு. சாந்தி தலைமை வகித்தாா். பள்ளி தலைமையாசிரியை த. சரோஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வசந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உடற்கல்வி ஆசிரியை குழந்தை தெரசா வரவேற்றாா்.

இப்போட்டியில் 37 பள்ளிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தனியாா் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ- மாணவிகள் பங்கேற்றனா். இதில் 100 மீ, 200 மீ, 800 மீ, 1500 மீட்டா் ஓட்டப் போட்டிகளும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தனித்திறன் போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டியினை பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த உடற்கல்வி ஆசிரியா்கள் நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT