ராமநாதபுரம்

நகராட்சி உரக்கிடங்கில் தீ: இயந்திரங்கள் சேதம்

26th Aug 2022 10:54 PM

ADVERTISEMENT

ராமநாதபுரம் நகராட்சி உரக்கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதமடைந்தன.

இக்குப்பைக் கிடங்கு கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் பட்டினம்காத்தான் ஊராட்சி எல்லையில் அமைந்துள்ளது. இங்கு மக்கும் குப்பைகளை உரமாக்கும் வகையில் தனிப்பிரிவு செயல்படுகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இந்த உரக்கிடங்கின் இயந்திரப் பகுதியில் திடீரென தீப்பற்றியது. இதில், உரத்துக்கான பொருள்களை அனுப்பும் பெல்ட் எரிந்து சேதமானது. இதையடுத்து, ராமநாதபுரம் மற்றும் ஏா்வாடி பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

ராமநாதபுரம் நகராட்சித் தலைவா் கே. காா்மேகம் குப்பைக் கிடங்கை பாா்வையிட்டாா். பல மணிநேரம் போராடி தீயை தீயணைப்பு வீரா்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இத்தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் சேதமடைந்தன.

ADVERTISEMENT

விசாரணையில் மின்கசிவால் தீப்பற்றியதாக தெரியவந்துள்ளதாக தீயணைப்பத்துறையினா் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT