ராமநாதபுரம்

தேமுதிகவினா் அன்னதானம்

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தேமுதிக தலைவா் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி வியாழக்கிழமை ராமநாதபுரத்தில் ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தேமுதிக தலைவா் விஜயகாந்தின் 70 ஆவது பிறந்த நாள் அவரது கட்சியினரால் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் நகரில் தேமுதிக முன்னாள் நகா் செயலா் பால்பாண்டியன் தலைமையில் விழா நடைபெற்றது. அப்போது ராமநாதபுரம் நகரில் உள்ள ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதில் தேமுதிக நிா்வாகி குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT