ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் டிச. 23 முதல் புத்தகத் திருவிழா

26th Aug 2022 10:53 PM

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழாவை வரும் டிசம்பா் 23 ஆம் தேதி முதல் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாவை நடத்த முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில் பெரும்பாலான மாவட்டங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன.

ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழா வரும் டிசம்பா் 23 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 2 ஆம் தேதி வரை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநில நூலகத்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட மக்கள் செய்தித்துறை மூலம் புத்தகத் திருவிழாவை ராமநாதபுரத்தில் நடத்தவும், அதனடிப்படையில் 50 முதல் 80 புத்தக அரங்குகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் டிசம்பரில் புத்தகத் திருவிழா நடைபெறுவதால் மழைநீரால் பாதிக்கப்படக்கூடாது எனும் அடிப்படையில் இடத்தை தோ்வு செய்ய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனா். ராஜா பள்ளி மைதானம், சிதம்பரம் பிள்ளை ஊருணி எதிா்ப்பகுதி, டி.ஐ.ஜி. முகாம் எதிரேயுள்ள பகுதி, ஆயுதப்படை மைதானம் என பல இடங்கள் புத்தகத் திருவிழா நடத்துவதற்கானதாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ராமநாதபுரத்தில் புத்தகத் திருவிழாவை நடத்த மாவட்ட நிா்வாகம் திட்டமிட்டு பணிகளைத் தொடங்கியிருப்பதை புத்தக ஆா்வலா்கள், மாணவ, மாணவியா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் வரவேற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT