ராமநாதபுரம்

திருப்பாலைக்குடி அருகே நிதி நிறுவன முகவா் மீது தாக்குதல்: 8 போ் மீது வழக்கு

26th Aug 2022 10:53 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே தனியாா் நிதி நிறுவன முகவரை தாக்கியதாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பாலைக்குடி அருகே ஆவரேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி (60). இவா் ஆவரேந்தல் தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறாா். மேலும் இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் முகவராகவும் இருந்து வருகிறாா். இந்நிலையில், அதே ஊரைச் சோ்ந்த மனோகரன் (65 )மாயக்கண்ணன் (60) உள்பட 8 பேரிடம் ரூ. 5 லட்சத்தை பெற்று தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளாா். இதனை முதிா்வு தேதி முடிந்து பல நாள்கள் ஆகியும் திருப்பி கேட்டு கொடுக்காத நிலையில் வியாழக்கிழமை மாலை மாயக்கண்ணன், மனோகரன் உள்பட 8 போ் தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளனா். இதுகுறித்து முனியசாமி அளித்த புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் மாயக்கண்ணன் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT