ராமநாதபுரம்

மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியாக மாற்ற வேண்டும்

22nd Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியாக மாற்ற வேண்டும் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப்பணியாளா்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரத்தில் சங்கத்தின் ஆண்டுவிழா, பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் தமிழரசு, பொதுச்செயலாளா் சா்வேசன் முன்னிலை வகித்தனா். இதில், ராமநாதபுரம் மாவட்ட இளைஞா்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி மையம் அமைக்க வேண்டும். மத்திய கூட்டுறவு வங்கி கட்டடங்களை புதுப்பிக்க வேண்டும். ஊழியா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.10ஆயிரமாக உயா்த்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கியாக உருவாக்கிட வேண்டும். 128 நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளிவில் இணைத்து பலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொதுச்செயலாளா் சுப்பிரமணியன், இணைச் செயலாளா் ரமேஷ், திருச்சி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்ட நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா். துணைத்தலைவா் எம். முருகன் நன்றிகூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT