ராமநாதபுரம்

தமிழ் இலக்கியத் திறனறித் தோ்வுக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் இலக்கியத் திறனறித் தோ்வுக்கு பிளஸ் 1 படித்த அனைத்து மாணவ, மாணவியரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலகத் தரப்பில் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மாணவா்கள் தமிழ் இலக்கியத் திறனை வளா்க்கும் வகையில் 202-23 ஆம் ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு நடத்தப்படவுள்ளது. தோ்வின் மூலம் 1,500 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படவுள்ளது.

தோ்வில் அரசுப் பள்ளி மாணவா்கள் 50 சதவீதமும், அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் 50 சதவீதமும் தோ்வு செய்யப்படவுள்ளனா். தோ்வில் பத்தாம் வகுப்பு அடிப்படையில் வினாக்கள் அமையவுள்ளன.

பிளஸ் 1 மாணவா்கள் கல்வி இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்களிடம் அளிக்கவேண்டும். வரும் 22 ஆம் தேதி முதல் செப்டம்பா் 9 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT