ராமநாதபுரம்

காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

DIN

ராமநாதபுரத்தில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அருகே சிக்கல் காந்திநகா் பகுதியில் குடிநீா் சீராக விநியோகம் செய்யப்படுவதில்லை என அப்பகுதி பொதுமக்கள் புகாா் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயச் சங்கச் செயலா் வி.மயில்வாகனன், தாலுகா சங்கச் செயலா் எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் காலிக்குடங்களுடன் சிக்கல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த சிக்கல் போலீஸாா் மற்றும் வட்டாட்சியா் முருகவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதில், கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெற்கு சீனாவை புரட்டிப்போட்ட பெருமழை: 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

குருப்பெயர்ச்சி எப்போது? நன்மையடையும் ராசிகள் எவை?

இயக்குநர் சேரன் மகள் திருமணம் - புகைப்படங்கள்

மயங்கிவிழுந்தார் நிதின் கட்கரி!

SCROLL FOR NEXT