ராமநாதபுரம்

பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

DIN

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு தொலைதூர எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் பாதுகாப்புடன் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என மீனவா்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

மீன்பிடிக்கத் தடை: ராமேசுவரம் கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, மண்டபம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதியில்லை என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT