ராமநாதபுரம்

பெண் சமூகப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

19th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் காலியாக உள்ள பெண் சமூக பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பெண் சமூகப்பணியாளா் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியில் சேருபவருக்கு மாதம் ரூ. 14 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களாக இருத்தல் அவசியம். பட்டதாரிகளாக, முதுகலைப்பட்டதாரிகளாக விண்ணப்பதாரா்கள் இருத்தல் அவசியம். அவா்களில் உளவியல், சமூகப்பணி, வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறையில் பட்டம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், குழந்தைகள் நலன், சமூக நலன், தொழிலாளா் நலன் ஆகியவை சாா்ந்த பணிகளில் 2 ஆண்டுகள் அனுபவம் இருக்கவேண்டும். வயது வரம்பாக 40 வயது நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதியுடன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவராகவும், அரசிதழில் கொள்கை வரைவு மற்றும் களப்பணி நடைமுறைப்படுத்தல் தொடா்பான பணியில் அனுபவம் உள்ளவராகவும் இருந்தால், 62 வயதுக்கு உள்பட்டவராக இருக்கவேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பதாரா்கள் தங்களது சுயவிவரக் குறிப்புகளுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT