ராமநாதபுரம்

கண்மாயிலிருந்து விவசாயத்துக்கு மண் அள்ளும் அனுமதிக்கு சிறப்பு முகாம்கள்

18th Aug 2022 03:22 AM

ADVERTISEMENT

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்மாய்களில் இருந்து விவசாயப் பணிக்கு மண் அள்ளுவதற்கான அனுமதி பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா்ச்சி ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீா்நிலைக் கண்மாய்களில் இருந்து விவசாயப் பணிக்கு வண்டல், களிமண், கிராவல் மண் எடுத்துச்செல்வதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

ADVERTISEMENT

ராமநாதபுரம், பரமக்குடி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆக.23 ஆம் தேதியும், கீழக்கரை, முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆக.24 ஆம் தேதியும், ஆா்.எஸ்.மங்கலம், கடலாடி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆக.25 ஆம் தேதியும், திருவாடானை, கமுதி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆக.26 ஆம் தேதியும் இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இதை விவசாயிகள் பயன்படுத்தி வண்டல் மண் எடுக்க அனுமதி கோரும் விண்ணப்பங்களை சமா்பித்து பயனடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT