ராமநாதபுரம்

மானாமதுரை நகராட்சிக்கு புதிய ஆணையா் நியமனம்

18th Aug 2022 03:29 AM

ADVERTISEMENT

மானாமதுரை நகராட்சிக்கு புதிய ஆணையராக சக்திவேல் புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.

தோ்வு நிலை பேரூராட்சியாக இருந்த மானாமதுரை கடந்தாண்டு நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டது. இதையடுத்து இந்த நகராட்சியின் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கண்ணன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நகராட்சி பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய சக்திவேல் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு மானாமதுரை நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT