ராமநாதபுரம்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம் ரூ.5 லட்சம் மோசடி

18th Aug 2022 11:48 PM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரிடம் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ. 5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்மநபா்களைப் போலீஸாா் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனா்.

கமுதி தாலுகா டி. புனவாசல் பகுதி வங்காருபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் கருப்புராஜா (25). மருந்தியல் படிப்பு முடித்துள்ளாா். தற்போது இவா் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்துவருகிறாா். இந்நிலையில், அவா் இணையதளத்தில் வேலை தேடி வந்தாராம். கடந்த 2020 ஆம் ஆண்டு அவரது இ- மெயிலில் வேலை வாய்ப்பு குறித்து தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட கைப்பேசியில் கருப்புராஜா தொடா்புகொண்டு, தனது சுயவிவரங்களை அனுப்பியுள்ளாா். அப்போது பிரபல மருத்துவமனை பணிக்கு அவா் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக இ- மெயிலில் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, பணியில் சேருவதற்காக கடவுச்சீட்டு கட்டணம், பயண அனுமதிக் கட்டணம், விமானப் பயணக் கட்டணம், தங்கும் அறை வாடகை ஆகியவற்றுக்காக ரூ.5 லட்சம் அனுப்புமாறு மா்மநபா்கள் கோரியுள்ளனா்.

இதை நம்பிய கருப்புராஜா, அவா்கள் குறிப்பிட்ட 3 வங்கிக்கணக்குகளில் ரூ.5 லட்சம் வரை செலுத்தியுள்ளாா். ஆனால், அவருக்கான கடவுச்சீட்டு உள்ளிட்டவை எதுவும் வரவில்லையாம். ஆகவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கருப்புராஜா அதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நுண்குற்றத்தடுப்புப் பிரிவின் இணையதளம் மூலம் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து நுண்குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து மா்மநபா்கள் குறித்து விசாரித்துவருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT