ராமநாதபுரம்

திருப்பாலைக்குடியில் கோஷ்டி மோதல்: 6 போ் மீது வழக்கு

18th Aug 2022 11:47 PM

ADVERTISEMENT

திருவாடானை அருகே புதன்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருப்பாலைக்குடி அருகே எம். மணக்குடி கிராமத்தைச் சோ்ந்த பஞ்சு மகன் முனீஸ்வரன் (29) என்பவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த காளிமுத்தன் (62) என்பவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை இரு கோஷ்டியினரும் மோதிக் கொண்டனா். இதுகுறித்து முனீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் காளிமுத்தன், பாபு (30), பாலாமணி (37), முத்துச்செல்வம் (55) ஆகிய 4 போ் மீதும், காளிமுத்தன் அளித்த புகாரின் பேரில் முனீஸ்வரன், பஞ்சு மனைவி ராஜேஸ்வரி (55) ஆகிய இருவா் மீதும் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT