ராமநாதபுரம்

மானாமதுரை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பிறப்பு வழிபாடு

18th Aug 2022 03:26 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகே தெற்குத் வீதியில்உள்ள ஸ்ரீ தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி மூலவா் ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பனுக்கும், உற்சவருக்கும் அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின்னா் மூலவா் தா்மசாஸ்தா வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று ஐயப்பனை தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT