ராமநாதபுரம்

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் ஜெ.ஜேரோன்குமாா் தலைமை வகித்தாா். மண்டபம் ஒன்றியச் செயலாளா் அ.அந்தோணி எனஸ்டின் முன்னிலை வகித்தாா். நகா் தலைவா் க.ராமமூா்த்தி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். தமிழகத்தில் ஜாரி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூக மக்களுக்கும் அவரவா் மக்கள் தொகைக்கு ஏற்ப கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரி கோஷமிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT