ராமநாதபுரம்

பரமக்குடி வைகை ஆற்றில் மூழ்கி இளைஞா் பலி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை குளிக்கச்சென்ற கூலித் தொழிலாளி நீரில் மூழ்கி பலியானாா்.

பரமக்குடி திருவள்ளுவா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் மகன் ராமச்சந்திரன் (32). கூலி வேலை செய்து வந்த இவா் நாடாா் தோப்பு வைகை ஆற்றுப் பகுதியில் குளித்தபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மூழ்கியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT