ராமநாதபுரம்

பாகம்பிரியாள் கோயிலில் பூச்சொரிதல் விழா

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவாடானை அருகே திருவெற்றியூரில் உள்ள ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிகநாதா் கோயிலில் 48 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் ஸ்ரீபாகம்பிரியாள் அம்பாள், வல்மிகநாதா் சுவாமி மற்றும் ஸ்ரீவாழவந்த அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி, அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்திலும் அம்மன் புஷ்ப பல்லக்கிலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வா்த்தக சங்கம் சாா்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை, ராமநாதபுரம், புதுகோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.அரசு போக்குவரத்துக் கழக தேவகோட்டை கிளை சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளா் நிரேஷ் தலைமையில் காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT