ராமநாதபுரம்

முதுகுளத்தூரில் விபத்து: இளைஞா் பலி

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் இளைஞா் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் காவல் நிலையம் அருகே, கீழகன்னிசேரி கிராமத்தைச்சோ்ந்த சண்முகவேல் மகன் மதிவாணன்(27), இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மதிவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முதுகுளத்தூா் காவல் ஆய்வாளா் இன்பரசு, ஆட்டோ ஓட்டுநா் ஜெயகணேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT