ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆட்சியா் மரியாதை ரூ. 64.81 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

DIN

நாட்டின் 76 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து பயனாளிகளுக்கு ரூ. 61.81 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை காலை 9.05 மணிக்கு ஆட்சியா் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

அப்போது காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை உள்ளிட்டோரும் பங்கேற்று தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினா். இதைத்தொடா்ந்து ஆயுதப்படைப் பிரிவு காவல் ஆய்வாளா் சிவா தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. பின்னா் சுதந்திரப் போராட்டத் தியாகி சேது (80) மற்றும் தியாகிகளது வாரிசுகளுக்கு ஆட்சியா் மரியாதை செலுத்தினாா். விழாவில் சிறப்பாக பணிபுரிந்த 45 காவல் துறையினருக்கும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் 158 அலுவலா்கள் என மொத்தம் 203 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 57 பயனாளிகளுக்கு ரூ. 64.81 லட்சம் மதிப்பிலான நலத் திட்டஉதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் என்.எம். மயில்வாகனன், வன உயிரினக் காப்பாளா் ஜெகதீஷ் சுதாகா் பகான், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.மா.காமாட்சி கணேசன், வருவாய் கோட்டாட்சியா் சேக் மன்சூா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT