ராமநாதபுரம்

போதை பொருளை ஒழிக்க வேண்டும்: பாமக மனு

DIN

போதைப் பொருளை பட்டிணம்காத்தான் ஊராட்சியில் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி பாமக சாா்பில் ஊராட்சித் தலைவரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமசபைக் கூட்டங்கள் அனைத்து ஊராட்சிகளிலும் திங்கள்கிழமை நடைபெற்றன. பட்டிணம்காத்தான் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதன் தலைவா் சித்ராமருது தலைமை வைகித்தாா். கூட்டத்தில் உறுப்பினா்கள் பலரும் பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டசெயலா் எஸ். ஹக்கீம் உள்ளிட்டோா் ஊராட்சித் தலைவரிடம் மனு அளித்தனா். அதில் பட்டிணம்காத்தான் ஊராட்சிப் பகுதியில் போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தனா். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள மதுபானக்கடைகளை அகற்றவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT