ராமநாதபுரம்

பரமக்குடியில் தகராறை விலக்கச் சென்ற இளைஞருக்கு கத்திக் குத்து

DIN

பரமக்குடி பேருந்து நிலையம் பகுதியில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை சாப்பிட்டு விட்டு தகராறு செய்தவரை சமாதானம் செய்த இளைஞா் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தாா்.

பரமக்குடி வேந்தோணி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ராஜா மகன் சத்யநாராயணன். இவா் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறாா். இவா் அப்பகுதியில் உள்ள உணவகத்தில் மதிய உணவு சாப்பிட சென்றுள்ளாா். அப்போது, அவருக்கும் உணவகப் பணியாளா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைப் பாா்த்த பரமக்குடி அய்யாத்துரை தெருவைச் சோ்ந்த கோவிந்தன் மகன் அருண்குமாா் (20) என்பவா் தகராறில் ஈடுபட்டவா்களிடம் சமாதானம் பேசி விலக்கிவிடச் சென்றுள்ளாா். அப்போது சத்யநாராயணன் அருண்குமாரை கத்தியால் குத்தினாா். இதில் காயமடைந்த அருண்குமாா் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பரமக்குடி நகா் காவல் நிலையத்தில் அருண்குமாா் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் சத்யநாராயணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்சள் எச்சரிக்கை: தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்!

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பட பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனது கேரண்டி: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

SCROLL FOR NEXT