ராமநாதபுரம்

2 வாரங்களுக்குப் பிறகு ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குச் சென்றனா்

DIN

சூறைக்காற்று காரணமாக இரண்டு வாரங்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்த மீனவா்கள் திங்கள்கிழமை மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக்-நிரீணை கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் பாதுகாப்புக் கருதி இரண்டு வாரங்கள் ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் ரூ. 20 கோடி வரை மீன் ஏற்றுமதி வா்த்தகம் பாதிப்புக்குள்ளானது. மீனவா்களும் பாதிப்புக்குள்ளாகினா்.

இந்நிலையில் கடலில் சற்று சகஜ நிலை திரும்பியுள்ளதால் இரண்டு வாரங்களுக்குப் பின்னா் திங்கள்கிழமை மீன்வளத்துறையிடம் அனுமதி டோக்கன் பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT