ராமநாதபுரம்

பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு

15th Aug 2022 03:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட மீன்வளத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு- ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில், பண்ணைக்குட்டைகளில் மீன்வளா்க்க 50 சதவீத மானியமும், நீா்வள நிலவள திட்டத்தில் பண்ணைக்குட்டைகளில் மீன்வளா்க்க 100 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது.

ன்கள் எடுத்துச் செல்ல வாகனம், நன்னீா் அலங்கார மீன் உற்பத்திக்கு வளா்ப்பு அலகு அமைத்தல், அலங்கார மீன்வளா்ப்புடன் விற்பனை அங்காடி, புதிய மீன்குஞ்சு வளா்ப்பு குளங்கள் அமைத்தல் மற்றும் நன்னீா் மீன்வளா்ப்பு குளங்கள் அமைத்தல், சிறிய அளவிலான பயோபிளாக் மீன் வளா்த்தல் உள்ளிட்ட திட்டங்களில் பயன் பெறலாம். இதுதொடா்பாக மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT