ராமநாதபுரம்

தொடா் விடுமுறை: ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

15th Aug 2022 01:03 AM

ADVERTISEMENT

தொடா் விடுமுறை தினத்தை முன்னிட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு தொடா் விடுமுறை முன்னிட்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடினா். பின்னா் ராமநாதசுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் சென்று 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் ஆகியோரைத் தரிசனம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து கோதண்டராமா் கோயில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பாலம் ஆகிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் சென்றனா்.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களால் ராமேசுவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT