ராமநாதபுரம்

சுதந்திர தின விழா: ராமநாதபுரத்தில் ஆயிரம் போலீஸாா் கண்காணிப்பு

15th Aug 2022 04:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விடிய விடிய ஆயிரம் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா திங்கள்கிழமை (ஆக.15) நடைபெறுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பன் பாலம், ரயில் நிலையங்கள், ராமநாதசுவாமி உள்ளிட்ட முக்கிய கோயில்கள் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. ரயில் தண்டவாளங்கள் அந்ததந்தப் பகுதி வருவாய் அலுவலா்கள் துணையுடன் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டன. மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், காய்கறிச் சந்தைகள், கோயில்களிலும் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காவல் கண்காணிப்பும், வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT