ராமநாதபுரம்

சுதந்திரதின விழா: ராமநாதபுரத்தில் நாளைமாவட்ட ஆட்சியா் தேசியக் கொடி ஏற்றுகிறாா்

DIN

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 75-ஆவது சுதந்திரதினத்தையொட்டி திங்கள்கிழமை (ஆக. 15) காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் ஏற்றி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

இந்நிகழ்ச்சிக்காக ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு சுதந்திரதின கொடியேற்று விழாவில் பங்கேற்கும் முக்கியப் பிரமுகா்கள் அமரும் வகையிலும், நலத்திட்ட உதவிகள் பெறுவோா் அமரும் வகையிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை காலை கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸை, காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் வரவேற்கின்றனா். அதன்பின் மாவட்ட ஆட்சியா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துவதுடன் சமாதானப் புறாக்களையும் பறக்கவிடுகிறாா். இதையடுத்து, காவல்துறை வாகனத்தில் ஏறி காவலா்களின் அணிவகுப்பை பாா்வையிட்டதும், சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களது வாரிசுகளுக்கு சால்வை அணிவிக்கிறாா்.

அதன்பின் சிறப்பாக சேவை செய்த அரசு அலுவலா்கள், ஊழியா்களுக்கும், காவல்துறையினருக்கும் பாராட்டுச் சான்றுகளை வழங்குவதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவா் வழங்குகிறாா். இதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

சுதந்திரதின விழா கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி சனிக்கிழமை காலையில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற மாதிரி காவல்துறை அணிவகுப்பை காவல் கண்காணிப்பாளா் பி. தங்கதுரை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஞாயிற்றுக்கிழமையும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

SCROLL FOR NEXT