ராமநாதபுரம்

குறுமிளாங்குடி புனித சுவக்கின் அன்னாள் ஆலய விழா கொடியேற்றம்

DIN

திருவாடனை அருகே குறுமிளாங்குடி கிராமத்தில் புனித சுவக்கின் அன்னாள் ஆலய கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு, பங்குத்தந்தை மரியஅருள் தலைமை வகித்தாா். சிவகங்கை மறைமாவட்ட தலைமைச் செயலா் சூசைமாணிக்கம், புனித சுவக்கின் அன்னாள் உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தாா். அதனைத் தொடா்ந்து அருள்தந்தையா்கள் சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினா். இதில் குறுமிளாங்குடி பங்கு இறைமக்கள், அருள்சகோதரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில், ஒவ்வொரு நாளும் ஜெபமாலை மற்றும் சிறப்புத் திருப்பலி நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ்பவனி வரும் 20 ஆம் தேதி மதுரை மறைமாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT