ராமநாதபுரம்

தொண்டி அருகே சோதனைச் சாவடியில் பெண் சடலம் மீட்பு

14th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

திருவாடானை அருகே பழைய சோதனைச் சாவடியில் தூக்கிட்ட நிலையில் பெண் சடலமாக போலீஸாரால் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டாா்.

தொண்டி அருகே வீரசங்கிலி மடம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவெற்றியா் விளக்கு சாலையில் உள்ள பழைய சோதனைச் சாவடி கட்டடத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு வட்டாட்சியா் செந்தில்வேல் முருகன், தொண்டி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து இவா் யாா், எந்த ஊா், கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT