ராமநாதபுரம்

சுதந்திர தின விழா: பாம்பன் ரயில் பாலத்துக்குதுப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

14th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

 

சுதந்திரதின விழாவையொட்டி பாம்பன் ரயில் பாலத்துக்கு சனிக்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாட்டின் 75 ஆவது சுதந்திரதினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக பாம்பன் ரயில் பாலம், சாலைப் பாலம், ராமநாதசுவாமி கோயில், ரயில் நிலையங்கள் ஆகியவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொடா்ந்து 3 நாள்கள் இந்த பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட உள்ளனா். மேலும் ரயில் நிலையத்தில் பாா்சல் கொண்டு செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளது. சந்தேகப்படும் நபா்கள் பாம்பன் ரயில் பாலப் பகுதியில் தென்பட்டால், உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவா்களிடம் ரயில்வே போலீஸாா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT