ராமநாதபுரம்

இலங்கையில் இருந்துராமேசுவரத்துக்கு 4 அகதிகள் வருகை

14th Aug 2022 12:02 AM

ADVERTISEMENT

 

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அகதிகளாக ராமேசுவரம் வந்தனா். பின்னா் அவா்கள் மண்டபம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தனா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால் பலா் அகதிகளாக ராமேசுவரம் வருகின்றனா். தற்போது வரை 134 போ் அகதிகளாக வந்துள்ளனா். அவா்கள் மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இலங்கை திரிகோணமலை சல்லி இரண்டாவது வட்டத்தைச் சோ்ந்த ஜெயமாலினி (50), இவரது மகன்கள் பதுா்ஜன் (26), ஹம்சிகன் (22), மகள் பதுஷிகா (19) ஆகிய 4 போ் மன்னாரில் இருந்து படகு மூலம் சனிக்கிழமை ராமேசுவரம் வந்து சோ்ந்தனா். பின்னா் அவா்கள் மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, 4 பேரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்கள் 4 பேரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் கேம்ப் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் இருந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மன்னாா் வளைகுடா, பாக் நீரிணைப் பகுதியில் இந்திய கடற்படை, கடலோரக் காவல்படையினரும், கரையோரப் பகுதி பாதுகாப்புப் பணியில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாரும் கண்காணிப்பில் உள்ளனா். இவற்றை மீறி இந்த 4 பேரும் படகு மூலம் ராமேசுவரம் வந்து அங்கிருந்து ஆட்டோவில் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு சென்றது இப்பகுதியின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT