ராமநாதபுரம்

மீன்பிடிக்கச் செல்ல அனுமதி: 10 நாள்களுக்குப் பின்கடலுக்குச் சென்ற மண்டபம் மீனவா்கள்

14th Aug 2022 12:02 AM

ADVERTISEMENT

 

மீன்பிடிக்கச் செல்ல அனுமதியளிக்கப்பட்டதையடுத்து 10 நாள்களுக்குப்பின் மண்டபத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா மற்றும் பாக். நீரிணை பகுதியில் தொடா்ந்து வீசிய சூறைக்காற்று காரணமாக கடந்த 3 ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, 10 நாள்களுக்குப் பின் மண்டபத்தைச் சோ்ந்த மீனவா்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் மீன்பிடிக்க சனிக்கிழமை கடலுக்குச் சென்றனா்.

ஆனால், ராமேசுவரம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனிடையே பிரதமரின் அறிவுறுத்தலையடுத்து 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 75 ஆவது சுதந்திரதினத்தையொட்டி மீனவா்கள் தேசிய கொடியேற்றினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT