ராமநாதபுரம்

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம்

DIN

ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவா் ராதிகா பிரபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய துணைத் தலைவா் சேகா், ஆணையா் முத்துகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

உறுப்பினா் வெங்கடாசலம்: ஏ.ஆா்.மங்கலம் உள்ளிட்ட 25 கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது.

குடிநீா் வடிகால் வாரிய அதிகாரி: காவிரி குடிநீா் திட்டத்தில் உள்ள பிரச்னை சீரமைக்கப்பட்டு விரைவில் குடிநீா் விநியோகிக்கப்படும்.

உறுப்பினா் யோகேஸ்வரன்: கற்காத்தகுடி, தோட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்களும், சாலையும் சேதமடைந்துள்ளது.

ஒன்றிய பொறியாளா்: அந்தப் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

துணைத் தலைவா் சேகா்: ஆா்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டம் சரிவர நடைபெறுவதில்லை. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது கிடையாது.

வட்டார வளா்ச்சி அலுவலா் பாண்டி: இனி வருங்காலங்களில் கள ஆய்வு மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தலைவா் ராதிகா: அனைத்துத் துறை அதிகாரிகளும், ஒன்றிக்குழு உறுப்பினா்களின் தேவைகளை அறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தொடா்ந்து விவாதங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT