ராமநாதபுரம்

பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மனு

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமேசுவரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா்கள் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கக் கோரி துணை ஆணையா் மாரியப்பனிடம், மாணவிகளின் பெற்றோா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நிா்வாகத்தால் ஸ்ரீபா்வதவா்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 1963 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளில் மட்டும் 499 மணவிகள் மற்றும் மொத்தம் 965 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், மாணவிகளின் பெற்றோா், இந்து அறநிலைத்துறை துணை ஆணையரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு: பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஆசிரியா்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் மாணவிகளுக்கு ஏற்ற வகையில் கழிப்பறை மற்றும் தூய்மை பணியாளா்கள் இல்லை. பாதுகாவலா் நியமிக்கப்படவில்லை என கூறியிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT