ராமநாதபுரம்

கபடி போட்டிக்கு அனுமதி அளிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

13th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாரம்பரிய கபடிப் போட்டியை நடத்த காவல் துறை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி முகவை மாவட்ட முன்னேற்றக் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

முகவை மாவட்ட முன்னேற்றக் கூட்டமைப்பு சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் க.தீரன்திருமுருகன் தலைமையில் ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அதன்பின் அவா் செய்தியாளா்ளிடம் கூறியதாவது- தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியானது ஜல்லிக்கட்டுவில் பங்கேற்போருக்கான பயிற்சியாகவே உள்ளது. தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலும், இலங்கை, மலேசியா, ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் கபடி விளையாடப்பட்டுவருகிறது. இந்தநிலையில், ராமநாதபுரத்தில் குறிப்பிட்ட போட்டியில் ஏற்பட்ட பிரச்னையை வைத்து கபடி விளையாட காவல்துறை தடைவிதித்திருப்பது சரியல்ல.

நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் கபடி விளையாடப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அந்த விளையாட்டுக்கு தடை விதித்திருப்பது அரசியலமைப்புச் சட்ட உரிமையை மீறுவதாக உள்ளது. ஆகவே, கபடி விளையாட்டுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT